நாம் தினசரி சாப்பிடும் பல பழங்கள் நமக்கு நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இருப்பினும், எல்லா பழங்களும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு சம அளவு நன்மைகள் தரவில்லை. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் அல்லது ரத்த சர்க்கரை அளவை கவனிக்க வேண்டியவர்கள் உணவு தேர்வில் சிறிது கூட கவனக்குறைவாக இருக்கக் கூடாது.

பழங்களில் இயற்கை சர்க்கரை உள்ளதென்றாலும், அவை பதப்படுத்தப்பட்ட சர்க்கரையைவிட சீரான வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகின்றன. ஆனால், அதிக பிரக்டோஸ் கொண்ட பழங்கள் சிலருக்கு உடல் எடையைக் கூட்டவும், கல்லீரல் மற்றும் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதனால், ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க சில பழங்களைத் தவிர்த்து, குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களை தேர்வு செய்ய வேண்டும். இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
உகந்த பழங்களில் பெர்ரி வகைகள் (ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி), ஆப்பிள், பேரிக்காய், பீச், பிளம்ஸ், கிவி மற்றும் ஆரஞ்சு அடங்கும். இவை நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்தவை. தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கிய வளர்சிதை மாற்றத்தை தரும்.
இதே நேரத்தில், அதிக சர்க்கரை உள்ள பழங்களை—பெரிய அளவில் எடுக்க வேண்டாம். உதாரணமாக, வாழைப்பழம், மாம்பழம், திராட்சை, தர்பூசணி மற்றும் 100% பழச்சாறு போன்றவை ரத்த சர்க்கரையை விரைவில் அதிகரிக்கக்கூடியவை. இவைகளை மிதமாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
பழுக்காத பலாப்பழம், பப்பாளி மற்றும் கொய்யா போன்றவை குறைந்த பிரக்டோஸ் கொண்டதாக இருப்பதால், சாலட்ஸ் மற்றும் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் வடிவில் எடுத்துக்கொள்ள ஏற்றவை. மருத்துவ ஆலோசனையோடு உணவு பழக்கங்களை அமைப்பது சிறந்தது.