சென்னை: கண்கள் பிரகாசமாக இருக்க, நந்தியாவட்டை பூவைப் பறித்து வந்து சுத்தம் பார்த்து, வெள்ளைத் துணியில் சுற்றி கண்களில் மேல் வைத்துக் கட்டி வந்தால் போதும். மேலும் ஒரு வழியில் செய்யலாம். பறித்து வந்த பூவை தண்ணீரில் நன்கு கழுவி, கண்களின் மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சி பெறுவதோடு அழகும் கூடும்.
கண்கள் அழகாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டுமானால், பண்ணைக் கீரை, சிறுகீரையை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை புளி சேர்க்காமல் சமைத்தும் சாப்பிடலாம். முழு நிலவன்று இரவு நிலவைப் பார்ப்பது நல்லது. கண்களை நன்கு திறந்து சுத்தமான தண்ணீரை கண்களில் தெளித்துக் கொண்டாலும், கண்கள் அழகாகும்.உருளைக்கிழங்கு ஒன்றை சரி பாதியாக வெட்டி, வெட்டப்பட்ட பகுதியை கண்களைச் சுற்றியும், கைகள், கழுத்து ஆகிய பகுதிகளிலும் மெதுவாகத் தேயுங்கள்.
உங்களுடைய கண்கள் மீதும், உள்ளங்கால்களின் மீதும்கூட அதைத் தேய்க்கலாம். இப்படிச் செய்தால், கண் கருவளையங்களும், தோலின் மீதுள்ள மருக்களும் மறையும்.