கருஞ்சீரகம் மற்றும் கொய்யா இலைகள் உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக கூறப்படுகிறது. இவற்றின் மருத்துவ குணங்களைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட முறையில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு பயனளிக்கும் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இரவில், கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி, தேனுடன் கலந்து 1-2 கிராம் அளவில் சாப்பிடுவது தொப்பையை குறைக்க உதவும். இது சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்த உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொய்யா இலையின் மருத்துவ குணங்களையும் பயன்படுத்த முடியும். 5 கொய்யா இலைகள், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வெந்தயம், 5 ஆவாரம் பூக்கள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க விட்டு அரை கிளாஸ் அளவிற்கு வடிகட்டி குடிப்பது உடலுக்கு பலனளிக்கும்.
இவை அனைவருக்கும் பயனுள்ள மருந்துகளாக அமையலாம், ஆனால் கிடைக்காத பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.