முடி உதிர்வதற்கு சரியான தூக்கமின்மையும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. முடி உதிர்தல் என்பது இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. பல்வேறு இயற்கை பொருட்களைப் பயன்படுத்தினாலும், முடி உதிர்வது தொடர்கிறது.
இரவில் சரியாக தூங்காமல் இருப்பது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முடி ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். மேலும், தூங்கச் செல்வதற்கு முன், தலைமுடியை நன்றாகப் பிரித்து, தளர்வாகப் பின்ன வேண்டும்.
முடியை இறுக்கமாக கட்டிக்கொண்டு தூங்க கூடாது. இரவில் முடி ஈரமாக இருந்தால், அதை முழுமையாக உலர்த்திய பின்னரே தூங்கவும். மருதாணி, ஹேர் பேக்குகள் போன்றவற்றுடன் தூங்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது தலைக்கு ஆரோக்கியமற்றதாக இருக்கும்.