சென்னை: வாரத்தில் மூன்று நாட்கள், ஒவ்வொரு தம்ளர் உளுந்து பால் பருகி வந்தால் என்ன மாதிரியான நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உளுந்து பால் நரம்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும் பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் உதவுகிறது.
வயிறு சங்கடம் போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து பால் ஒரு அருமருந்து. உடல் சூட்டை தணித்து , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது. குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்குகிறது.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, இதயத்தை பலப்படுத்துகிறது இந்த உளுந்து பால். உடல் சோர்வு, அசதி ஆகியவை நீங்கும். வயதானவர்களுக்கு கால் மூட்டுகளில் லூப்ரிகேட்டராக செயல் பட்டு, மூட்டு வலியைக் குறைக்க வல்லது உளுந்து பால்.