குளிரூட்டப்பட்ட அறையில் அல்லது இரவு முழுவதும் ஏசி ஆன் வைத்து தூங்குவது ஆரம்பத்தில் மனநலத்திற்கு இனிமையாக தோன்றினாலும், நீண்டகாலத்தில் அது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். ஏசி வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவினாலும், உடலின் சமநிலை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மன நலத்திற்கு சில தீமைகள் ஏற்படும்.

- தோல், முடி மற்றும் உடல் ஈரப்பதம் குறைவு – ஏசி காற்றில் ஈரப்பதத்தை குறைத்து வறண்ட சூழலை உருவாக்குகிறது. இதனால் தோல் உலர்வு, உதடு மற்றும் முடி உதிர்வு அதிகரிக்கலாம். ஒட்டுமொத்த உடல்நலமும் பாதிக்கப்படலாம்.
- உட்புற காற்று மாசு மற்றும் சுவாச பிரச்சனைகள் – AC யூனிட்ஸில் உள்ள தூசி, பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் மாசடைந்த காற்றை உருவாக்கலாம். இது சுவாச குழாயை பாதித்து, இருமல், தும்மல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவு – செயற்கை வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நீண்ட நேரம் இருக்கும்போது, உடல் இயற்கையான வெப்பநிலை சுழற்சியை கற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சிறு தொற்றுகள், காய்ச்சல் அல்லது சளி ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்.
- தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி – குளிர்ச்சியான காற்று ரத்த ஓட்டத்தை குறைத்து, முதுகு, கழுத்து மற்றும் தோள்களில் லேசான வலி அல்லது குறைபாடுகளை ஏற்படுத்தலாம்.
- தூக்கத் தரம் குறைவு – அதிக குளிர்ச்சியிலான சூழலில் தூங்குவதால், ஆழ்ந்த தூக்கத்தின் போது உடல் வெப்பநிலை இயற்கையாக குறைகிறது. இதனால் உடல் முறையாக ஓய்வு பெற முடியாமல் போய், அடுத்த நாள் ஆற்றல் மற்றும் அறிவாற்றலில் பாதிப்பு ஏற்படும்.
- தோல் மற்றும் நுண்ணுயிர் பாதிப்பு – AC-யில் நீண்ட நேரம் இருப்பது தோல் மற்றும் மூக்கின் நுண்ணுயிர் சமநிலையை பாதிக்கலாம். இது உடலில் சிறு தொற்றுகள் மற்றும் சரும எரிச்சலை ஏற்படுத்தும்.