சென்னை: மருத்துவக்குணம் நிறைந்த கற்பூர வள்ளி… பலரது வீட்டில் வீட்டை சுற்றி பல மூலிகை செடிகளை தங்களது தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அத்தகைய செடிகளில் கற்பூரவள்ளி (ஓமவல்லி) செடியும் ஒன்று. மற்ற மூலிகை செடிகளை காட்டிலும் கற்பூரவள்ளி செடியானது அதிக நறுமணத்துடன் காணப்படுகிறது. இதில் எண்ணற்ற பலன்கள் உள்ளது.
கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
சுவாச பிரச்சனைகள் மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா காசநோயாக கூட மாறநேரிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து. 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.