ஆப்பிரிக்காவின் சஹாரா மற்றும் தெற்காசியாவில், வயிற்றுப்போக்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே உயிரிழப்பிற்கான முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 1990 முதல் 2021 வரை வயிற்றுப்போக்கால் ஏற்படும் உலகளாவிய இறப்புகளில் 60% குறைவானதையும் ஆய்வு காட்டுகிறது.
லான்செட் தொற்று நோயியல் ஆய்வின் படி, 2021 இல் 1.2 மில்லியன் உயிரிழப்புகள் வயிற்றுப்போக்கால் ஏற்பட்டுள்ளன. மேம்பட்ட சுகாதாரம் மற்றும் ரோட்டா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி திட்டங்கள் இறப்புகளை குறைப்பதில் முக்கிய பங்காற்றின.ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியில் 1,00,000 மக்கள்தொகைக்கு 150 குழந்தைகள் உயிரிழப்பையும் தெற்காசியாவில் முதியவர்களின் இறப்பு விகிதம் அதிகமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய முயற்சிகள், உடனடி சிகிச்சை மற்றும் ஓஆர்எஸ் உள்ளிட்ட தீர்வுகளை சரியாகப் பயன்படுத்துவது அவசியமாகும். சரியான தடுப்பூசிகள், சுகாதார விழிப்புணர்வு, மற்றும் நீரிழப்பு தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே இந்த பிரச்சினையை குறைக்க உதவவல்லன.