சென்னை: தசைபிடிப்பானது பெரும்பாலான நேரங்களில் கால்களிலேயே ஏற்படும். தசைபிடிப்பு ஏற்படும் போது நம்மால் இரண்டு அடி கூட நகர இயலாது , தசைபிடிப்பானது சில விநாடிகள் முதல் நிமிடக் கணக்கில் நீடிக்கும்.
தசைபிடிப்பு நீங்கினாலும் அந்த இடத்தில் ஒரு சில மணி நேரங்கள் முதல் நாட் கணக்கில் வலியின் தாக்கம் இருக்கும். தசைபிடிப்பானது தானாகவே சரியாகி விடும். ஆனால் அடிக்கடி தசைபிடிப்பு ஏற்பட்டு , வலி தொடருமானால் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
கால்களில் ஒரு தசையை அதிகளவு பயன்படுத்தி உழைக்கும் போது தசைபிடிப்பு ஏற்படும். வியர்வை மூலம் உடலில் திரவங்களை இழப்பது அல்லது ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமருவது தசைபிடிப்பிற்கான காரணிகளாக அமைகின்றன. இவை மட்டுமே காரணங்கள் என்றும் கூற முடியாது.
தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது கால்களுக்கு ரத்தத்தை கொண்டும் வரும் தமனிகள் குறுகலாகி தசைபிடிப்பு ஏற்படும். அப்போது உடனடியாக உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் தசைபிடிப்பு போய்விடும். முதுகுத்தண்டில் உள்ள நரம்புகளின் அதிக அழுத்தம் ஏற்படும் போதும். அப்போது நீங்கள் நடந்தால் வலி மேலும் மோசமாகிவிடும். சற்று முன்னோக்கி வளைந்து நடப்பதன் மூலம் தசைபிடிப்பை குறைக்கலாம்.
உண்ணும் உணவில் பொட்டாசியம் , மெக்னீஸியம் , கால்சியம் மிகக் குறைவாக இருந்தால் தசைபிடிப்பு ஏற்படும். அதே நேரத்தில் அதிக ரத்த கொதிப்பிற்கு நீங்கள் உட்கொள்ளும் மாத்திரைகளால் அதிகளவு சிறுநீர் கழிக்க நேரிடும் . இதன் மூலமாகவும் உடலில் உள்ள கணிமங்கள் குறையலாம். இயல்பாகவே மனிதர்கள் வயதான காலத்தில் தசையை இழப்பார்கள். அப்போது தசைகளின் செயல்பாடு கடினமாகி அதிக அழுத்தம் உண்டாகும்.
ஒரு வேலையைச் செய்யும்போது , அதற்கான முழு வடிவத்தில் இருப்பது அவசியம். அப்படி இல்லையென்றால் தசைகள் எளிதாகத் தளர்ந்து விடும்.