கடுமையான சீதபேதியால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொண்டு, அதனுடன் மோர் சேர்த்து அருந்த உடனடி குணம் கிடைக்கும்.
*மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச்சாறை சம அளவு எடுத்து அதில் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும்.
*கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச்சாறு நான்கையும் தலா 1 கப் எடுத்து கலந்து, உருட்டு பதத்தில் பாகு காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, 2 வேளை சாப்பிட்டு வர, படை, தேமல் போன்ற சரும நோய்கள் குணமாகும்.
*மாதுளம்பழச் சாறையும், அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடிக்க சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
*1 தேக்கரண்டி மாதுளை ஜூஸ், அரை தேக்கரண்டி சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவிட முகத்தில் பளபளப்பு கூடும்.
*சிலருக்கு கண் பொங்கி திறக்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படும். இந்நிலையில், இமைகளும் உதிர்ந்துவிடும். இதற்கு மாதுளம்பழத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஆறியதும் அந்த தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது நிற்கும்.
*மாதுளம் பொடியுடன் 1 தேக்கரண்டி பயத்தமாவு, அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு கலந்து இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம்
2 முறை செய்துவர, பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
*மாதுளம் தோல் பொடியுடன், 1 தேக்கரண்டி வெட்டிவேர் பொடி சேர்த்து விழுதாக்கி இதை முகத்தில் கலந்து பூசி, காய்ந்தபிறகு கழுவ, பருக்கள் வரவே வராது.