பிர்ச் மகரந்த ஒவ்வாமை ( birch pollen allergy) உள்ள ஒருவர் பலாப்பழத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவை நோயாளிகளுக்கு பலாப்பழத்திற்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும் என ஒரு ஆய்வு நிரூபிக்கிறது. பலாப்பழம் இரத்தம் சம்பந்தமான கோளாறுகள் உள்ளவர் உட்கொள்ளும் போது உறைதல் அதிகரிக்கும்.
நீங்கள் பலாப்பழத்தை மயக்க மருந்துகளுடன் (sedative medications)உட்கொண்டால், அது தூக்கத்தை தூண்டும். மயக்கமருந்துகள் உட்கொண்டால் தானாகவே தூக்கம் வரும். அதனுடன் பலாப்பழத்தை சாப்பிடும்போது விளைவுகளை தீவிரப்படுத்தலாம். இது செரிமானத்திற்கு சிறந்தது ஆனால் குறிப்பாக இரைப்பை பிரச்சனை உள்ளவர்களுக்கு அல்ல. காரணம் இது உடலில் வாயுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் பலாப்பழத்தை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும் மற்றும் அதை உட்கொள்ளும் முன் தங்கள் மருத்துவர்களை கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில் பலாப்பழம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் அதிகப்படியான நுகர்வு தீங்கை விளைவிக்கும். இருப்பினும், இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால், அதிகமாகச் சாப்பிடுவது எப்போதுமே கேடுதான்.
பலாப்பழத்தைப் பொறுத்த வரை அதை பழுத்த அல்லது பழுக்காத இரண்டு வடிவங்களிலும் அவற்றை உண்ணலாம். பலாப்பழத்தை அதன் பழுக்காத வடிவத்தில் சாப்பிட, நீங்கள் அதை சமைக்க வேண்டும். பழம் பழுத்தவுடன், அதை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஐஸ்கிரீம், டெஸர்ட் போன்ற இனிப்புகளை தயாரிக்க பயன்படுத்தலாம் அல்லது புட்டு போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவை அதீதமாய் இருக்கும். பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ரைபோஃப்ளேவின், கரோட்டினாய்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் செரிமானம், தோல் பிரச்சினைகள், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், வீக்கம் மற்றும் பலவற்றிற்கு உதவுகின்றன.