பொடுகு மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு சின்ன வெங்காயம் மூலம் இயற்கையான தீர்வு கிடைக்கலாம். இயற்கை சிகிச்சையாக இது எந்தவிதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துகள் முடி உதிர்வை குறைத்து, இளநரையைத் தடுக்கும் திறன் கொண்டவை.
இந்த ஹேர் பேக் தயாரிக்க சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து அதன் சாறை வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதை தலையில் தேய்த்து, 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளிக்க வேண்டும்.
இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், பொடுகு மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகள் குறையத் தொடங்கும். மேலும், முடிக்கு தேவையான சத்துகளை வழங்கி, ஆரோக்கியமாக வளரச்செய்யும்.
மருத்துவரின் ஆலோசனையை பெறுவதும் பாதுகாப்பானது.