வழக்கமான தலைவலியோடு ஒப்பிடும்பொழுது, ஒற்றைத் தலைவலி என்பது மிகவும் மோசமான வலியாக கருதப்படுகிறது. இதில், தலையின் ஒரு பக்கத்தில் அதிகப்படியான வலி, மங்கலான பார்வை, குமட்டல், வாந்தி மற்றும் வெளிச்சத்திற்கு கண் கூச்சம் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்த வலி சில மணி நேரங்கள் முதல் நாட்கள் வரை நீடிக்கலாம், மேலும் இது அன்றாட வேலைகளை செய்ய கடினமாக்குகிறது. பெண்களிடையே இதற்கான முக்கிய காரணம் ஹார்மோன் சமநிலையின்மை ஆகும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவுகளின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த நரம்பு சார்ந்த கோளாறு தூண்டப்படுவதாக கூறப்படுகிறது.

இது பொதுவாக மாதவிடாய்க்கு முன்பும், மாதவிடாயின் போது, மெனோபாஸ் மற்றும் கர்ப்ப காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது. மேலும், சில மருந்துகள், மதுபானம் மற்றும் அதிகமான காஃபைன் எடுத்துக் கொள்வதாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் கடினமான உடற்பயிற்சி போன்றவையும் இதனை தூண்டக்கூடும். சில வாசனைகள், பர்ஃப்யூம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளும் ஒற்றை தலைவலியை ஏற்படுத்த காரணமாக அமைகின்றன.
ஒற்றைத் தலைவலியைக் குறைக்க சில உதவிகரமான வழிமுறைகள் உள்ளன. முதன்மையாக, அமைதியான சூழலில் ஓய்வு எடுப்பது முக்கியம். வலியானது எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், நீங்கள் சரியான முறையில் ஓய்வு எடுத்துக் கொண்டால், இந்த தலைவலி மாறி போய்விடும். இருட்டான அறையில் படுத்து உறங்குவது நல்லது. வாந்தி ஏற்படும் போது போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். தசைகளில் உள்ள பதற்றத்தை போக்க, சூடான அல்லது ஐஸ் பேக் பயன்படுத்துவது உதவிகரமாக இருக்கும்.
மேலும், ஒற்றை தலைவலியை தவிர்ப்பதற்கு நன்றாக தூங்குவது முக்கியம். இரவு நேரத்தில் குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பு அமைதியான இசை கேட்பது அல்லது புத்தகங்களை வாசிப்பது, தூக்கத்தை மேம்படுத்த உதவும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது கூட முக்கியம். ஒற்றைத் தலைவலி மற்றும் மன அழுத்தம் ஒருவருக்கொருவர் தொடர்புடையவை. உங்களை ஆற்றலிழந்தவையாக உணரும்போது, நடைபயிற்சி செய்ய அல்லது மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதனால் தலைவலியுடன் தொடர்புடைய மன அழுத்தம் குறையும்.
தினசரி உடற்பயிற்சி செய்வதும் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் சில கெமிக்கல்களை வெளியிட்டு, மூளையில் உள்ள வலி சிக்னல்களை மறைக்கும். இது பதட்டம் மற்றும் மனசோர்வை குறைத்து, தலைவலியிலிருந்து நீக்குகிறது.
மற்ற முக்கியமான பராமரிப்பு ஒன்று ஆரோக்கியமான உணவு. ஒற்றைத் தலைவலி நோயாளிகள் வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது. மேலும், சீஸ், சாக்லேட் போன்ற உணவுகளை தவிர்ப்பது அவசியம். இந்த உணவுகள் தலைவலியை தூண்டக்கூடும்.
இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி, ஒற்றைத் தலைவலியைக் குறைத்து, இதனை சமாளிக்க முடியும்.