வீட்டில் வெட்டிவேர் ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் வீட்டின் மூலைமைகளில் இயற்கையான மனம் பரவி மனதிற்கு நிம்மதி தருகிறது. வெட்டிவேர் தாவரம் மருத்துவ குணங்களுடன் செறிவூட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.

வீட்டுக் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் வெட்டிவேர் ஸ்கிரீன் வைத்து, வீட்டில் குளிர்ச்சியையும் சுத்தமான காற்றையும் பரப்ப முடியும். இதனால் வீடு புத்துணர்ச்சியுடன் தோன்றும்.
இந்த ஸ்கிரீனை வீட்டிலேயே தயாரிக்கலாம். வெட்டிவேர் புல் வகையைச் சேர்ந்த வேரானது 4 மீட்டர் வரை வளரக்கூடியது. அதை பன்னீர் கலந்த தண்ணீரில் ஊற வைத்து, தேவையான உயரத்திற்கு ஏற்ப கோர்த்துக் காய வைத்து ஸ்கிரீனாக மாற்றலாம்.
மேலும், வெட்டிவேர் ஸ்கிரீன் வீட்டில் அழகான விண்டேஜ் லுக்கையும் அளிக்கும். சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இதன் மருத்துவ நன்மை கூட உதவும். மனம் காற்றில் மென்மையாக பரவி, வீட்டில் இயற்கையான சூழல் மற்றும் நிம்மதியை ஏற்படுத்தும்.