சென்னை: நன்னாரி வேரை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடித்து வந்தால் வாத நோய்கள் குணமாகும்.
நன்னாரி வேரில் சாறு எடுத்து காலை, மாலை இருவேளையும் குடித்து வந்தால் தோல் நோய்கள் குணமாகிவிடும். நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சமஅளவு எடுத்து கஷாயமாக தயாரித்து குடித்தால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் உடல் சூடு தணியும்.
நன்னாரி வேர், நெருஞ்சிமுல் இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள் கரைந்துவிடும். நன்னாரி, தனியா, சோம்பு மூன்றையும் சமஅளவு எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
நன்னாரி வேரை, நெல்லிக்காய் சாறில் ஊற வைத்து, உலர்த்தி பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும். இதயம் வலுவடையும்.