அக்குள் பகுதியில் திடீர் வீக்கம் ஏற்படுவது மார்பக புற்றுநோயின் ஒரு அறிகுறி.
மார்பக முளைக்காம்புகளில் ரத்தம் அல்லது ஏதேனும் திரவங்கள் வெளியேறினால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
மார்பகத்தின் தோல் தடினமாகி அதன் அமைப்பில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மார்பகத்தில் உள்ள முளைக்காம்புகள் உள்நோக்கி திரும்பியவாறு காணப்படுவதும் மார்பக புற்றுநோயின் ஒரு முக்கியமான அறிகுறி.
மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
இந்தியா உட்பட பல இடங்களில் மார்பக புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். புற்றுநோய் என்றாலே அது வலி மிகுந்ததாக இருக்கும் என்று தாங்களாகவே எண்ணிக் கொண்டு, வலி இல்லாத கட்டிகளை பலர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக நோய் தீவிர கட்டத்தை அடைந்த பிறகு அது கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலானதாக அமைகிறது.
மார்பக புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவது அதற்கான வெற்றிகரமான சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மாமோகிராபி போன்ற நோய் கண்டறிதல் முறை மூலமாக மார்பக புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு, அதற்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது அது கண்டறியப்படும் நிலையை பொறுத்து அமைகிறது.
உதாரணமாக ஆரம்ப கட்ட நிலைகளான 1 மற்றும் 2ல் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை மற்றும் குறைந்தபட்ச கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை போதுமானதாக இருக்கும். புற்றுநோய் கட்டிகளை அகற்றி அதே நேரத்தில் நோயாளியின் வாழ்க்கை தரத்தை பராமரிப்பது இந்த சிகிச்சையின் இலக்காக அமைகிறது.
உடற்பருமன் என்பது மார்பக புற்றுநோய்க்கான முக்கியமான அபாய காரணியாக கருதப்படுகிறது.
மது அருந்துவதை குறைத்துக்கொள்வதும், புகைப்பிடிப்பதை தவிர்ப்பதும் மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான முக்கியமான இரண்டு விஷயங்கள்.
வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்து உடலை ஆக்டிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது, குழந்தை பெற்றுக் கொள்வது மற்றும் அதற்கான நேரம் ஆகியவை மார்பக புற்றுநோய் அபாயத்தை தூண்டலாம்.
சிறுவயதில் பூப்படைதல் மற்றும் மெனோபாஸ் போன்றவையும் மார்பக புற்றுநோய்க்கான அபாய காரணியாக அமைகிறது.