சென்னை: அதிக நன்மைகள்… முடக்குவாத நோய்களை தீர்க்க கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை அதிகம் உபயோகப்படுத்தலாம். ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு கை, கால், விரல்கள் மூட்டுகளில் வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும்.
இதனால் கை, கால் அசைக்க முடியாமல் முடக்கிவிடும். இவர்களுக்கு காலை நேரத்தில் வலியுடன் மூட்டுகளில் இளஞ்சூடு இருக்கும். இவர்கள் வாத இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் நோய் தீவிரமும் வலியும் குறைவதை உணரலாம்.
காலை வேளையில் எழுந்ததும் வாதநாராயணன் இலையை கடுகு எண்ணெயுடன் கலந்து மைய அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம், இளஞ்சூடு உணர்வு தணியும்.
வாத இலையை நீரில் ஊறவைத்து அந்த நீரை மூட்டுகள் இருக்கும் இடங்களில் பொறுமையாக ஊற்றிவந்தால் குடைச்சல் குறையும். மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு தக்க நிவாரணி வாதநாராயணன் கீரை. இந்த வாதநாராயணன் கீரைக் குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள், பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக அமையும்.
மழை காலம், வெயில் காலம் என்று எல்லா நேரங்களிலும் சாப்பிடலாம். நரம்புகளை பலப்படுத்தும். கை, கால் முடக்கத்தை போக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். முட்டி வலிக்கு சிறந்த வலி நிவாரணி, மலக்கட்டை நீக்கி, குடலை சுத்தப்படுத்தும்.