40 வயதிற்கு பிறகு ஆண்களின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, சில முக்கிய ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலின் செயல்பாடுகள் சரியாயிருக்கும் மற்றும் முதுமையைத் தடுக்க உதவிடும். இங்கே அந்த சப்ளிமெண்ட்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்:
- ஒமேகா-3:
மீன் எண்ணெய் மற்றும் பாசி எண்ணெய் போன்றவற்றில் நிறைந்த ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள், இதய ஆரோக்கியத்தை பராமரிக்க, மூளையை உறுதிப்படுத்த, வீக்கத்தை குறைக்க, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. - வைட்டமின் பி-12:
இரத்த சிவப்பணு உற்பத்தி மற்றும் நரம்பியல் செயல்பாடுகளுக்கான முக்கியமான வைட்டமின். இந்த சப்ளிமெண்ட், 2.4 மைக்ரோகிராம்கள் அளவில் தினசரி பரிந்துரைக்கப்படுகிறது. - மல்டிவைட்டமின்:
வைட்டமின் D, C, மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கொண்ட மல்டிவைட்டமின்கள், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் முக்கியமாக செயல்படுகின்றன. - பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள்:
ஆற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்குத் தேவை. இது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. - ஜிங்க்:
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை ஊக்குவிக்கும், காயங்களை குணப்படுத்தும் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும். - புரோபயாடிக்குகள்:
செரிமானத்தை மேம்படுத்த மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்க உதவுகின்றன. - கோஎன்சைம் Q10:
ஆன்டிஆக்ஸிடன்ட் கொண்ட இந்த சப்ளிமெண்ட், ஆற்றலை அதிகரிக்க, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொண்டது. - மெக்னீசியம்:
தசை செயல்பாடு மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது. இது மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். - கொலாஜன்:
மூட்டு வலி மற்றும் தோல் பிரச்சனைகளை எதிர்த்து, முடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். - வைட்டமின் டி:
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த, வைட்டமின் D3 சப்ளிமெண்ட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சப்ளிமெண்ட்களை உடனுக்குடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களெனில், மருத்துவரின் பரிந்துரைகளை பின்பற்றுவது முக்கியம்.