பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மாற்றக் கட்டமாகும் மெனோபாஸ், பொதுவாக 46 முதல் 55 வயதுக்குள் தான் ஏற்படுவது வழக்கம். ஆனால் இன்று, 30 வயதிலேயே பல பெண்கள் ஹாட் ஃப்ளாஷ், மாதவிடாய் சீர்கேடு, வறட்சி, தூக்கமின்மை, மனச்சோர்வு, சிறுநீரக பிரச்சனைகள் போன்ற மெனோபாஸ் தொடர்பான அறிகுறிகளை சந்தித்து வருகின்றனர். இது ப்ரீ-மெனோபாஸ் எனப்படும் இயற்கையான மாற்ற காலத்தை குறிக்கலாம் அல்லது ப்ரீமெச்சூர் மெனோபாஸ் எனும் முன்கூட்டிய ஹார்மோன் செயலிழப்பு காரணமாக இருக்கலாம்.

இதற்கு முக்கியமான ஒரு காரணமாக ஃப்ரீமெச்சூர் ஓவேரியன் இன்சஃபிஷியன்சி (POI) எனப்படும் நிலை உள்ளது. இதில் 40 வயதிற்கு முன்பே கருமுட்டைகளின் செயல்பாடு குறைந்து, ஈஸ்ட்ரோஜன் அளவுகள் சரிவதன் மூலம் மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றுகின்றன. மரபணு கோளாறுகள் மற்றும் தன்னையுதியாக தாக்கும் நோய்கள் இதற்குப் பின்வரும் முக்கியக் காரணிகளாகும். அதே நேரத்தில், சிலர் பெறும் கிமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் காரணமாகவும் கருமுட்டைகள் பாதிக்கப்படலாம்.
மேலும், புகைபிடித்தல், அதிக மது அருந்துதல், மன அழுத்தம், உடல் பருமன், PCOS, குடும்ப வரலாறு போன்ற காரணிகளும் முன்கூட்டிய மெனோபாஸை தூண்டக்கூடும். 30 வயதுக்குள் மாதவிடாய் தவறுதல், இரவில் அதிக வியர்வை, ஹாட் ஃப்ளாஷ் போன்ற அறிகுறிகள் வந்தால், அதனை தவிர்க்காமல் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.
40க்கு முன் மெனோபாஸ் ஏற்படுவது இயல்பானது அல்ல. ஆனால் அதைத் தாமதிக்காமல் கண்டறிந்தால், வாழ்வை கட்டுப்படுத்தும் திறன் பெற முடியும். எனவே, உங்கள் உடலின் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனிக்கவும், அந்த அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆரம்பத்திலேயே இதை கவனித்தல் உங்கள் ஆரோக்கிய வாழ்வின் நெறிமுறையை உறுதிப்படுத்தும்.