கோடை நாட்களில் உடல் சூடாக மாறுவதால், இயற்கையான குளிர்பானங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அதில் சுரைக்காய் ஜூஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து காரணமாக இது உடலை மட்டுமல்ல, உடலின் பல உறுப்புகளுக்கும் நன்மை தரக்கூடியது. சுரைக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல் இயற்கையாக குளிர்ச்சியாக மாறும்.

இது செரிமானத்திற்கும் நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது அஜீரணம், மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. வயிற்று சுத்தமாகவும் இருக்கிறது. ஒரே நேரத்தில், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சுரைக்காய் ஜூஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் மற்றும் நீர்ச்சத்து, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. வியர்வை மற்றும் தூசி சேர்ந்து ஏற்படும் கோடைச் சரும பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
மேலும், சுரைக்காய் ஜூஸ் சரும சுருக்கங்களை குறைத்து, முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகுந்த பயன் தரும். இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்தை சீராக செயல்படச் செய்கின்றன. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
சிறுநீரகங்களுக்கும் இது பயனளிக்கிறது. டையூரிடிக் தன்மை கொண்ட சுரைக்காய், சிறுநீரை தூண்டி, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை சக்தி இதில் உள்ளது. மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த பானமாக இருக்கிறது. ஏனெனில் இது குறைந்த கலோரியுடன், அதிக நீர்ச்சத்தையும் கொண்டுள்ளது.
எடையைக் குறைக்க விரும்புவோருக்கும் இது சிறந்த பானமாக அமையும். தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம், உடல் புத்துணர்ச்சியாக மாறும். உங்கள் உணவுப் பழக்கங்களில் இதனை சேர்ப்பதற்கு முன், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சுரைக்காய் ஜூஸ் குடிப்பது, கோடை வெயிலில் கூட உங்கள் உடலை ஈரமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க சிறந்த வழியாகும்.