ஹார்வர்டில் பயிற்சி பெற்ற பிரபல குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த எண்ணெய்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். இவரின் பரிந்துரையில் முதலில் EVOO (எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில்) வருகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் ஃபேட்ஸ் நிறைந்துள்ளதால் நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும். குறைந்த ஸ்மோக் பாயின்ட் கொண்டதால், லேசான முதல் மிதமான வெப்பத்தில் சமையலுக்கு ஏற்றதாகவும் உள்ளது.

EVOO-வில் oleic ஆசிட், பாலிஃபினால்ஸ், தாவர அடிப்படையிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை குடலில் ஏற்படும் இன்ஃப்ளமேஷன் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை குறைக்கும், குடல் புறணியை பாதுகாக்கும், நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். IBD போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும் திறன் EVOO-க்கு உள்ளது. பல ஆய்வுகள், Mediterranean டயட் உட்பட ஆலிவ் ஆயிலை தொடர்ந்து பயன்படுத்துவது குடல் ஆரோக்கியத்துக்குப் பயனுள்ளதாக நிரூபித்துள்ளன.
அடுத்த சிறந்த எண்ணெய் ஆக அவகேடோ ஆயில் பரிந்துரைக்கப்படுகிறது. அதிக ஸ்மோக்கிங் பாயின்ட் கொண்டதால், வறுத்தல் மற்றும் ஏர் ஃப்ரை போன்ற அதிக வெப்பத்தில் சமையலுக்கு ஏற்றது. அதிக மோனோசாச்சுரேட்டட் ஃபேட்ஸ் கொண்ட அவகேடோ எண்ணெய், பச்சையாகவும், சமைத்த உணவுகளுக்கும் பயன்படுத்த ஏற்றது. அதேபோல், ஆளிவிதை எண்ணெய் (omega-3 ALA) இன்ஃப்ளமேஷன் குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நீங்கள் இவை இல்லாத சமயத்தில், தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவை மாற்றாகப் பயன்படுத்தலாம். சேச்சுரேட்டட் ஃபேட்ஸ் இருந்தாலும், அளவுக்கு ஏற்ப உடலில் நன்மை தரும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. ஆனால் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் சமையல் செய்வதை தவிர்க்க வேண்டும். இதனை மிதமான அளவில் சேர்த்து கொள்ளவேண்டும் என்றும் டாக்டர் சேத்தி அறிவுறுத்தியுள்ளார்.