மிளகாய் வத்தல் அதன் சிவப்பு நிறத்தாலும் காரத்தன்மையாலும் பிரபலமானது. பொதுவாக இது காரத்தை அதிகரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று பலர் நினைப்பார்கள். ஆனால் அதில் மறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகள் தருகின்றன.
அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் தகவலின்படி, சிவப்பு மிளகாய் வைட்டமின் ஏ-இன் சிறந்த மூலமாகும். வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உடலின் பல உறுப்புகளின் செயல்பாட்டை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தினமும் ஒரு சிறிய டீஸ்பூன் சிவப்பு மிளகாய் பொடி உட்கொள்வது வைட்டமின் ஏ குறைபாட்டை தடுக்கும். அதோடு வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன. வைட்டமின் கே இரத்த சுத்திகரிப்பு மற்றும் எலும்பு வலிமைக்கு உதவுகிறது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல் போன்றவற்றிலிருந்து காக்கிறது.
மிளகாய் வத்தலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உடல் செல்களை சேதத்திலிருந்து காக்கின்றன. இதன் மூலம் புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயம் குறைகிறது.
இதில் காணப்படும் கேப்சைசின் என்ற கூறு காரத்தன்மைக்குக் காரணமாக இருந்தாலும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. கேப்சைசின் வீக்கத்தை குறைக்கிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, எடை குறைக்க உதவுகிறது.
மேலும், கேப்சைசின் கலோரி எரிக்கும் விகிதத்தை அதிகரிக்கிறது. சாப்பாட்டுக்குப் பிறகு நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கிறது. வயிற்றில் செரிமான சாறுகளை அதிகரித்து உணவை எளிதில் ஜீரணமாக்குகிறது. இதனால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.
இவ்வாறு, மிளகாய் வத்தல் வெறும் கார உணவுக்காக மட்டுமின்றி உடல்நலத்திற்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. எனினும் அளவுக்கு மீறாமல் சாப்பிடுவது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இங்கு கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொதுவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.