
முடி உதிர்வு தற்போது பலருக்கும் பெரும் கவலையாக மாறியுள்ளது. ஆண்கள், பெண்கள் என வித்தியாசமின்றி அனைவருக்கும் இந்த பிரச்சனை இருக்கின்றது. ஆனால் இந்த ஒரு இயற்கை ஜூஸை தினமும் குடித்து வந்தால் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த ஜூஸ் வேறொன்றும் இல்லை, நம் பாரம்பரிய மோர் தான். வெறும் மோர் அல்லாமல் சில இயற்கை சத்துக்களுடன் சேர்த்து குடித்தால் முடி வளர்ச்சிக்கேற்ற ஆற்றல் கிடைக்கும்.

இந்த மாயமான ஜூஸை தயாரிக்க, ஒரு பெரிய நெல்லிக்காய், ஒரு இஞ்சி துண்டு, கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, ஒரு கப் தயிருடன் கலந்து சுவையான மோராக மாற்ற வேண்டும். தேவையான உப்பும், தண்ணீரும் சேர்க்கலாம். இந்த கலவையில் உள்ள அனைத்து பொருட்களும் முடி வளர்ச்சிக்கு துணைபுரிவவை. நெல்லிக்காயின் வைட்டமின் சி, கருவேப்பிலையின் இரும்புசத்து, இஞ்சியின் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை எல்லாம் சேர்ந்து முடி உதிர்வை தடுக்கிறது.
முறையாக இதைப் பயன்படுத்தும் போது முடி அடர்த்தியாக வளரும். சிலருக்கு குளிர்ச்சிக்கு உடல் ஒத்துக்கொள்ளாத நிலையில் வாரத்தில் மூன்று முறை குடிப்பது போதும். தினசரி குடிக்க விரும்பும் போது மருத்துவரின் ஆலோசனை அவசியம். இந்த மோர் ருசியாகவும் சத்துக்களுடன் கூடியதாகவும் இருப்பதால் அனைவரும் விரும்பி பருகலாம்.
இயற்கை வழியில் முடி உதிர்வை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் இந்த மேஜிக் ஜூஸை தவறாமல் முயற்சி செய்யலாம்.