மழைக்காலத்தின் போது ஏற்படும் எண்ணெய் பசை மற்றும் சோர்வான தோற்றம் ஆகியவற்றால் சருமம் பளிச்சென்று காணப்படாத நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, சமையலறையில் நம் அனைவருக்கும் பரிச்சயமான, நறுமண மசாலாப் பொருள் ஜாதிக்காய் மற்றும் ஜாதிப்பத்திரி, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நம்பகமான இயற்கை உதவியாக இருக்கும்.

ஜாதிப்பத்திரியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள், பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வழங்குகின்றன. இதன் தூள் வடிவம் முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஃபேஸ்பேக் செய்வதற்காக, அரைத்த ஜாதிப்பத்திரியை ரோஸ் வாட்டர் மற்றும் தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு பளபளப்பையும் மென்மையையும் தரும்.
அதேவேளை, இது வயது எதிர்ப்பு நன்மைகளையும் அளிக்கிறது. ஜாதிப்பத்திரியின் இயற்கையான சேர்மங்கள் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை குறைத்து, சருமத்தின் புதுப்பிப்பை தூண்டுகின்றன. மேலும், தினமும் இரவு சுடுபாலில் சிறிதளவு ஜாதிக்காயை கலந்து குடிப்பது தூக்கத்தை மேம்படுத்தி, புத்துணர்ச்சி தரும் தோற்றத்தை ஏற்படுத்தும்.
முகப்பரு மற்றும் ஹார்மோன் காரணமான சரும பிரச்சனைகள் கொண்ட பெண்களுக்கு, இது ஒரு பாதுகாப்பான தீர்வாக இருக்கக்கூடும். ஆனால் அளவிற்கு அதிகமாக உட்கொள்வது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், மிதமாகவே பயன்படுத்த வேண்டும். இந்திய சமையலறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஜாதிப்பத்திரி, இப்போது உங்கள் அழகுக்குறிப்புகளிலும் இடம்பிடிக்கலாம்.