சென்னை : தமிழ்நாட்டில் தீவிரவாதத்திற்கு எப்பொழுதும் இடமில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இனத்தால் மொழியால் மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று நினைக்கின்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் கிடைக்காது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் தமிழ்நாட்டில் தீவிரவாதத்திற்கு எப்பொழுதும் இடமில்லை என்று கூறினார்.