சென்னை: கொளத்தூரில் பரப்புரை செய்த போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதனையொட்டி நேற்று விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை செய்தார்.
இந்த சூழலில் தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது தேர்தல்நிலை கண்காணிப்பு குழு அதிகாரி அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.