சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். கட்சி பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
2026 சட்டசபை தேர்தல், கூட்டணி வியூகம் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. விஜய் கட்சி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால், அதுவரை, மக்கள் பிரச்னைகளை வெளியில் கொண்டு வந்து, போராட்டம் நடத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு, பொதுக்குழுவுக்கு முன், இடைத்தேர்தலை நடத்த,, அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., கிளைச் செயலர் முதல், பொதுச் செயலர் வரை, உள்கட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இணைந்து இருந்தபோது அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.