கொல்கத்தா: மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். எனவே தங்களின் பிடிவாதத்தை விட்டு தற்போது மம்தாவை இல்லத்தில் சென்று போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான சுவஸ்திய பவன் [Swasthya Bhawan] பவன் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மம்தா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சந்திப்பை நேரலை செய்தால் மட்டுமே தாங்கள் வருவோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
எனவே தங்களின் பிடிவாதத்தை விட்டு தற்போது மம்தாவை இல்லத்தில் சென்று போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். மம்தாவை அவரது இல்லத்தில் சந்திப்பதாக போராடும் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அதற்கு மம்தா உடனே சம்மதித்துள்ளார். அதன்படி தனது வீட்டு வாசல் வரை வந்த போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் உள்ளே வரமால் அங்கேயே மழையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்து கலக்கம் அடைந்த மம்தா, நீங்கள் என்னை சந்திக்க விருப்பினீர்கள். நான் அதற்கு சம்மதித்து உங்களுக்காக காத்திருக்கின்றேன்.
என்னை இப்படி அவமானப்படுத்தாதீர்கள், ஏற்கவே ஒருமுறை உங்களுக்காக 2 மணிநேரம் காத்திருந்தும் நீங்கள் வரவில்லை. தயவு செய்து வீட்டுக்குள் வாருங்கள். என்னை சந்திக்க விருப்பமில்லாவிட்டாலும் ஒரு கப் காப்பியாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்.
எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கின்றோம். நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் உள்ளே வந்து தங்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். எனவே அவர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.