படப்பிடிப்பிற்கு இடையே அஜித் பொழுது போக்குக்காக பல்வேறு மாநிலங்களுக்கு பைக்கில் பயணம் செய்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பைக்கில் செல்வது வழக்கம்.
தற்போது அஜித் ஒரு தனியார் சுற்றுலா நிறுவனத்தின் வீடியோ பதிவில் பேசியுள்ளார். பயண அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பதிவில் அஜித், “இதுவரை சந்திக்காத மனிதர்களை மதம் வெறுக்க வைக்கும் என்று ஒரு பழமொழி உண்டு.
அது உண்மைதான். மதம், ஜாதி வேறுபாடின்றி. மக்களைச் சந்திப்பதற்கு முன்பே நாம் தவறாக மதிப்பிடுகிறோம். நீங்கள் பயணம் செய்தால், வெவ்வேறு நாடு, மதம் மற்றும் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களை சந்திப்பீர்கள்.
இதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். பயணம் உங்களை சிறந்த மனிதராக மாற்றும்” என்றார் அஜித்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் பலரால் பகிரப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனெனில் பல வருடங்களுக்கு பிறகு அஜித் தனது படத்திற்கு வெளியே சமூக பிரச்சனைகளை பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.