ஆந்திரா : மும்மொழிக் கொள்கை குறித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை குறித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்” என்று கூறுவது மற்றொரு மொழியை வெறுப்பதாகாது என்று பதிலடி கொடுத்துள்ளார். இது நமது தாய்மொழியையும், தாயையும் சுயமரியாதையுடன் பாதுகாக்கும் முயற்சி என்பதை யாராவது பவன் கல்யாணிடம், எடுத்துச் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டார்.
பவன் கல்யாண் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.