செயல்தலைவர் ஸ்டாலின் பரிந்துரையின்படி அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றார். அதன்பின்னர் அமைச்சரவையில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 2024-ல், 5-வது முறையாக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
அதன்படி அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானார். செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், ராஜகண்ணப்பன் உள்ளிட்ட அமைச்சர்களின் பொறுப்புகளும் மாற்றப்பட்டன. இந்நிலையில் நேற்று 6-வது முறையாக அமைச்சரவை பொறுப்புகள் மாற்றப்பட்டன. ‘தலைவர் ஸ்டாலின் பரிந்துரையின்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, ஊரக தொழில் மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்படுகிறது’ என, கவர்னர் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.