By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
    ஈரான் டிரோன்களை உக்ரைன் படைகள் வீழ்த்தின… அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
    1 Min Read
    ஈரான் போர் குறித்து இன்று பாகிஸ்தானில் நடக்கிறது அமைதி பேச்சுவார்த்தை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    எந்த உணவுப் பொருட்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என தெரியுங்களா?
    1 Min Read
    தொப்பையையும் குறைக்கும் அன்னாசிப்பழம்!
    1 Min Read
    ஆரஞ்சு ஜூஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள்!!
    1 Min Read
    குறைந்த செலவில் ஒரு சுற்றுலாத் தலம்… கொடிவேரி அணைக்கட்டு!!!
    1 Min Read
    கடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தமிழ்நாட்டில் ஏஐ சிட்டி அமைக்கப்படும்… தவெக தலைவர் விஜய் உறுதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > தமிழ்நாட்டில் ஏஐ சிட்டி அமைக்கப்படும்… தவெக தலைவர் விஜய் உறுதி
அரசியல் செய்திகள்

தமிழ்நாட்டில் ஏஐ சிட்டி அமைக்கப்படும்… தவெக தலைவர் விஜய் உறுதி

Nagaraj
Last updated: April 12, 2026 7:26 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும்” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் மனுக்களுக்காகவே ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடலூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று கன்னியாகுமரியில் இன்று ரோடு ஷோவிற்கு அனுமதி தவெக தரப்பில் கோரப்பட்டது. இதற்காக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கன்னியாகுமரியில் மகாதானாபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்த விஜய் சைக்கிளில் சுற்றி வந்தார்.

இருபக்கமும் திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து விஜய் கை அசைத்தார். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “காரைக்குடி மக்களுக்கும் வணக்கம் சொல்லிக்கொள்கிறேன். அன்றைக்கு அங்கே பேச முடியவில்லை. கன்னியாகுமரி மக்களை சந்தித்ததில் சந்தோசம். இங்கே சிலவற்றை அறிவிக்க இருக்கிறேன். தமிழ்நாடு சிட்டிசன் கார்டு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தின் தரவுகள் அதில் சேர்க்கும். வீட்டு வாசலில் அரசின் நலத்திட்டங்கள் போய் சேரும். ஏஐ மூலம் இது செயல்படுத்தப்படும்.

சட்டப்பேரவையில் மக்களின் மனுக்கள் குறித்து விசாரிக்க நேரம் ஒதுக்கப்படும். தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். தவெக ஆட்சியில் ஆவணங்களின் பெயரால் லஞ்சம் வாங்குவது, அலைக்கழிப்பதை அனுமதிக்க மாட்டோம். நலத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டாம் வீடு தேடி அரசு திட்டம் வரும். நமது அரசு அமைந்த ஆறு மாதங்களுக்குள் “வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்” உருவாக்கப்படும். பல சேவைகள் அந்த செயலியில் இருக்கும்.

10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் அரசு பதில் அளிப்பது கட்டாயமாக்கப்படும். பத்து லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும். புதிய இணையதளத்தை உருவாக்கி அரசுக்கு முன்வைக்க உள்ள ஆலோசனைகளை வழங்கலாம். தமிழக அரசின் சேவைகள் தாமதமானால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் மனுக்களுக்காகவே ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

You Might Also Like

நவீன வசதிகளுடன் கூடிய அரசு நெல் அரவை ஆலை கொண்டு வருவேன்… திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி

மக்களிடம் மகிழ்ச்சியை காண்கிறேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

கன்னியாகுமரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த கோரிக்கை

உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்… பிரதமர் மோடி பதிவு

வெற்றி உங்களுக்குதான்… மலர்தூவி வாழ்த்துக்கள் தெரிவித்த பெண்கள்: யாருக்கு தெரியுங்களா?

TAGGED:AI CityLegislative AssemblyNew WebsiteTamil Nadu Government ServicesTevag Chairmanஏஐ சிட்டிசட்டசபைதமிழக அரசு சேவைகள்தவெக தலைவர்புதிய இணையதளம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய அரசு நெல் அரவை ஆலை கொண்டு வருவேன்… திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?