சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும். இது தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.

அதேபோல், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர், மண்டல செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டமும் மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டங்களில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு களப்பணிகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்.
எனவே, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அனைத்து நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட நாட்களில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.