ஓமலூர்: சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில், சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
இதில் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார். மேலும், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-
நாமக்கல் மாவட்டத்தில் அரியானா கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த போலீஸாரின் பணி பாராட்டுக்குரியது. தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ஆண்டுக்கு 6 சதவீத வரி உயர்வு அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும்.
அதிமுக ஆட்சிக்கு வந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.