சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் அவரது அண்ணன் அழகிரி.
முதல்வர் ஸ்டாலினுக்கு, அவரது அண்ணன் மு.க.அழகிரி நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நாளை பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு பேரனுடன் வந்த மு.க.அழகிரி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 2014ல் திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, சகோதரர்கள் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று தனது தம்பிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.