சென்னை : பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மழுப்பல் பதில் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு அதிமுக பாஜக கூட்டணி அமையும் என்ற யூகத்தை அதிகரித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இபிஎஸ் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
கூட்டணி அமையும்போது தங்களிடம் தெரிவிப்பேன் எனக் கூறிய அவர், ஒவ்வொரு கட்சியும் தேவைக்கு ஏற்ப கூட்டணி முடிவெடுக்கும் எனக் குறிப்பிட்டார். கூட்டணி அரசு அமையும் என்ற அமித்ஷாவின் பதிவு அவரது கட்சியின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
நேற்று அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.