சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழகத்தில் ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்திய மாநிலத் தகுதித் தேர்வுகள் தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியர் பணிக்கான தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்தியது.
அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. எனவே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாநிலத் தகுதித் தேர்வுகளை செப்டம்பர் இறுதிக்குள் வெளியிட்டு, அடுத்த மாத தொடக்கத்தில் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன்பிறகு, ஆசிரியர் தேர்வு வாரியம், உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை அக்டோபர் இறுதிக்குள் நடத்தி, நவம்பரில் முடிவுகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.