சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது X சமூக வலைதள பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் (#GetOutStalin) என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார். #GetOutStalin என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “ஒரே குடும்பம், ஊழல் அமைச்சரவை, ஊழல் மய்யம், சட்டம் ஒழுங்கைப் புறக்கணித்து, போதைப்பொருள் மற்றும் கொள்ளை சாராயத்தின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசை மக்கள் விரைவில் அகற்றுவார்கள்.
ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில், மக்களுக்கு நல்லாட்சியை வழங்கத் தவறிவிட்டது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முன்னதாக நேற்று சேலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 26-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் இருப்பேன். அப்போது துணை முதல்வர் உதயநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க தனியாக சென்னை அண்ணாசாலைக்கு வருவேன். எங்கு, எந்த நேரத்தில் வர வேண்டும் என்று கூறுகிறேன் என்றார்.

திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவும், அரசு இயந்திரமும் ‘கெட்-அவுட் மோடி’ என்ற முழக்கத்தை எக்ஸ்-தளத்தில் பயன்படுத்தியுள்ளன. ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் ‘கெட்-அவுட் ஸ்டாலினை’ பதிவிட உள்ளோம். யார் அதிகம் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று சவால் விட்டிருந்தார். இந்நிலையில் முன்னதாக அறிவித்தபடி இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது X சமூக வலைதள பக்கத்தில் Get Out Stalin (#GetOutStalin) என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தார்.