சென்னை: ஒரே ஒரு புகைப்படத்தை ெளியிட்டு அனைவரின் வாயையும் அடைத்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. விஷயம் என்ன தெரியுங்களா?
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு சர்வதேச அரசியல் படிப்புக்காக சென்றுள்ளார். அவர் அங்கு 3 மாதங்கள் வரை தங்கி படிக்கும் நிலையில் அண்ணாமலையில் லண்டன் சென்று நிலையில் அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்தது.
அதாவது அண்ணாமலை லண்டன் சென்றதிலிருந்து எந்த ஒரு சமூக வலைதள பதிவையும் வெளியிடவில்லை. இருப்பினும் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் தற்போது லண்டனுக்கு அவருடன் படிப்பதற்காக சென்ற சக நபர்களுடன் சேர்ந்து அண்ணாமலை புகைப்படம் எடுத்துள்ளார்.
லண்டன் சென்ற பிறகு அண்ணாமலை பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அவர் தொடர்பான புகைப்படம் வெளியானது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் எதிர்க்கட்சிகள் குறிப்பாக ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் அண்ணாமலை லண்டன் சென்ற பிறகு தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று கூறியிருந்தார். இப்படி எதிர்க்கட்சிகளின் பேச்சுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலையின் புகைப்படம் வெளியாகி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.