சென்னை : நகல் என்றுமே அசல் ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை தமிழக அரசு காப்பியடித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அத்துடன், நகல் என்றுமே அசல் ஆக முடியாது என முதல்வர் மருந்தகம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், தேர்வில் காப்பி அடிப்பது போன்ற மீம்ஸையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மீம்ஸ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.