சென்னை: “திராவிட கட்சியின் வாக்குகள் தற்போது பெருமளவில் சரிந்து வருகிறது. இது காலத்தின் கட்டாயம். அதன் வாக்கு வங்கி அடுத்த தேர்தலில் 12 சதவீதத்திற்கும் கீழே சென்றுவிடும். அது நடக்கும். அந்த இடத்துக்கு இன்னொரு கட்சி வரும். 2026 அதன் தொடக்கமாக இருக்கும். 2031-க்குள் திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகம் உருவாகும்,” என, பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி 40 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார். அதேபோல் மேற்கு வங்கத்தில் 40% வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி ஆட்சியை தக்கவைத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் 30 முதல் 35 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று ஆட்சிக்கு வருகின்றன.
திராவிட சித்தாந்தங்கள் காலாவதியாகி வருவதை ஒவ்வொரு தேர்தலும் சொல்கிறது. கடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. திராவிட அரசியலை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்பதே இந்தச் சரிவுக்குக் காரணம். 2026-ம் ஆண்டு நிச்சயம் கூட்டணி ஆட்சி அமையும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு திராவிடக் கட்சியின் வாக்குகள் இப்போது பெருமளவில் சரிந்து வருகின்றன. இது காலத்தின் கட்டாயம். அதன் வாக்கு வங்கி அடுத்த தேர்தலில் 12 சதவீதத்திற்கும் கீழே சென்றுவிடும்.
அது நடக்கும். அந்த இடத்துக்கு இன்னொரு கட்சி வரும். 2026 அதன் தொடக்கமாக இருக்கும். 2031 திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகம் உருவாகும். அதில் மாற்று கருத்து இல்லை,” என்றார் அண்ணாமலை. லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் சர்வதேச அரசியல் படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை, படிப்பை முடித்து நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 28-ம் தேதி தமிழகம் வரும் அண்ணாமலை, டிசம்பர் 1-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பிறகு அண்ணாமலை கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பார். 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், கடந்த லோக்சபாவின் போது நடத்தப்பட்ட ‘என் மண் என் மக்கள்‘ நடைபயணம் போல், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், பாஜகவின் வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்த வரும் ஜனவரி மாதம் நடைபயணம் மேற்கொண்டு, கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக, பா.ஜ.க., வட்டாரங்களில் கூறப்படுகிறது.