சென்னை : ஸ்ரீ மகாவதர் பாபாஜியின் குகையில் அண்ணாமலை தியானம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த 2 நாட்களுக்கு முன் மாற்றப்பட்டார். அதிமுக கூட்டணி நிர்பந்தம் காரணமாக அண்ணாமலை மாற்றப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தமிழக பாஜக தலைவராக, பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து அண்ணாமலை தனது பொறுப்புகளை நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைத்தார். இதனிடையே பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்படுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்தார்.
இந்நிலையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார்.
ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ள பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஸ்ரீ ஸ்ரீ மஹாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், அவ்வப்போது இமயமலை சென்று பாபாஜி குகையில் தியானம் செய்வது வழக்கம் ஆகும்.
அண்ணாமலையும் ரஜினியின் நண்பரும் இணைந்து பாபா முத்திரை எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. அண்ணாமலை ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு நாளை 16-ம் தேதி சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.