சென்னை: வரும் 9ம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடக்கிறது என்று அன்புமணி ராமதாஸ், ராவணன் கூட்டாக அறிவித்துள்ளனர். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.