சென்னை: அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவள்ளூர் மத்திய மாவட்டம், மதுரவாயல் தொகுதி, மதுரவாயல் வடக்குத் தொகுதிக்கு நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக பொருளாளர் ஜாவித் அகமது திடீர் அகால மரணம் அடைந்ததால், ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும், ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறும் இதர பொதுக்கூட்டங்களை விரைவில் நடத்த சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.