சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பிடித்துள்ளது.
திருவான்மியூர் – உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும். மீன்பிடித் தடைக்காலம் மானியமாக மீனவர்களுக்கு தலா ரூ.8,000 தரப்படும். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச் சாலை அமைக்கப்படும்.
உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் 52 ஏக்கரில் ரூ.70 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் இருந்து சின்னமுட்டம் வரை படகுப் போக்குவரத்து
சைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கு மேலும் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை. மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு ரூ.1,433 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவி வழங்கும் வகையில் சட்ட முன்படிவு கொண்டு வரப்படும்.
பள்ளிவாசல், தர்காக்கள், தேவாலயங்களை சீரமைக்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்புகளும் இடம் பிடித்துள்ளது.