சென்னை: பெரியாரையும் தெரியவில்லை. கமலையும் தெரியல… சொம்பு தூக்கி முட்டு கொடுக்கிறார்கள் என்று நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேசியதற்கு திமுக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்தது குறித்து கேள்விக்கு கஸ்தூரி கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
கமல்ஹாசன் பேச்சு குறித்த வீடியோ ஒன்றை என்னைக்காவது வெளியிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். கமல் பேச்சு ரைட்டு என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு அந்த பேச்சு புரியல. புரிஞ்சிருந்தால் வரவேற்று சரி என சொல்லமாட்டாங்க. அவர்களுக்கு பெரியாரையும் தெரியல. கமலையும் தெரியல. என்ன பேசினார் என்றும் தெரியல.
குருட்டுப்போக்குல எதுக்கும் இருக்கட்டும் என சொம்பு மட்டும் தூக்கி முட்டு கொடுத்துட்டு இருக்காங்க. அதுதான் உண்மை. தெலுங்கில் பிச்சை எடுத்த தியாகராஜர் எனச் சொல்லி தெலுங்கு பாசையையும், தெலுங்கு மொழியை அவமானப்படுத்திதான் பேச்சை ஆரம்பித்தார் கமல்.
தெலுங்கு மக்களை பேசியதாக பொய்யா கஸ்தூரி மேல இந்த அரசுக்கு வழக்குப் போடத் தெரியுது. தியாகராஜர் தெலுங்கில் பிச்சை எடுத்தார் என்ற கமலை பாராட்ட தெரியுது. இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.