சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. மாநில சுயாட்சி, மாநில உரிமைகளைப் பறித்தல், ஹிந்தி மொழியை திணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து போராட உள்ளோம்.
வரும் 3-ம் தேதி விழுப்புரத்தில் பிரமாண்ட பேரணி நடக்கிறது. இதில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். மாநில அரசை சிலர் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். சீமான் சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. காலையில் எழுந்தவுடன் என்ன தோன்றுகிறதோ அனைத்தையும் பேசுபவர். சர்வாதிகாரியாக இருப்பதே நாட்டின் சிறப்பு என்றால் ஹிட்லருக்கு தானே சிலை வைப்பார் போலும். இவ்வாறு அவர் கூறினார்.