சென்னை: திடீர் சந்திப்பு… தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை கவர்னர் ரவியை சந்தித்து பேசினார்.
தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. முன்னாதக டில்லி சென்றிருந்த கவர்னர் ரவி பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதனிடையே அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னர் ரவி டில்லி பயணத்தை முடித்து விட்டு சென்னை திருப்பினார்.
இந்நிலையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கவர்னரை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் வரையிலும் நடைபெற்ற சந்திப்பின்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,விசாரிக்க உத்தரவிட வலியுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.