விழுப்புரம்: புயல் பாதிப்புகள், வெள்ள நீரில் மூழ்கிய உப்பளங்களை என அனைத்தையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் மற்றும் மரக்காணத்தில் வெள்ளநீரில் மூழ்கியுள்ள உப்பளங்களை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.
உப்பளத் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை அதிகம் வருவதற்கு முன்பே அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும் சாத்தனூர் அணையால் ஏற்பட்ட பாதிப்பு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும் தெரிவித்தார்.