புதுடில்லி: பாஜக தலைவர்களிடையே அமைச்சரவையில் இடம் பிடிப்பது தொடர்பாக சண்டை நடந்து வருகிறது என்று முன்னாள் முதல்வர் அதிஷி விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்தும் இதுவரை யார் முதல்வர் என தீர்மானிக்கப்படவில்லை.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் அதிஷி, “தற்போது பாஜக தலைவர்களிடையே அமைச்சரவையில் இடம் பிடிப்பது தொடர்பாக சண்டை நடைபெற்று வருகிறது. அதிலும் பொதுமக்கள் பணத்தை சுரண்டுவதற்கான துறையை பெறுவதற்கான சண்டை நடைபெற்று வருகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.